fbpx

”அண்ணா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது”..!! ”நான் ஆக்ரோஷமாக தான் அரசியல் செய்வேன்”..!! அண்ணாமலை அதிரடி

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபடுகிறது. 24 ஆண்டுகளாக கிடப்பில் போட்டபட்ட மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் சட்டமன்றத்தில் அதிகமாக பெண்கள் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் குறைவாக இருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரை கட்சிக்குள் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 33% பெண்கள் அமர வேண்டும். நேற்று பாராளுமன்றத்தில் கனிமொழி உட்பட பெண்கள்தான் இது தொடர்பாக அதிகமாக பேசினார்கள். இதில் எந்த சதியும் இல்லை. 1976 ஒப்புக்கொள்ளப்பட்டு, 2001இல் நிறுத்தி வைக்கப்பட்டு பிறகு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் சதி என்ற வார்த்தையை முதலமைச்சர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என தெரியவில்லை.

அதிமுகவும் அண்ணாமலைக்கும் பிரச்சனை இல்லை. தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பிரச்சனை இல்லை. அதிமுகவில் உள்ள தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கிறதா என தெரியவில்லை. செல்லூர் ராஜூ கூறியதை நான் எப்படி அறிவிப்பேன். நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை. என்னுடைய தன்மானத்தை கேள்வி குறியாகும் போது நான் பதில் பேசுவேன். தமிழக பாஜகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

இரண்டு மூன்று நாட்களாக அதிமுகவின் தலைவர்கள் பேசியதற்கு நான் பதில் கூற முடியாது. தேசியத் தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பேசுவார்கள். தமிழ்நாட்டில் நான் பாஜக தலைவராக, ஒரு இலக்கு வைத்துள்ளேன். மது ஒழிப்பை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இலக்கணம் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவை எங்கேயும் எப்போதும் தரக் குறைவாக விமர்சித்தது கிடையாது. அதிமுக சனாதன தர்மத்தை வேற மாதிரி பேசுவார்கள். நான் கொஞ்சம் அழுத்தமாக கூறுவேன்.

எதையும் நான் பர்சனலாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் ஆக்ரோஷமாக தான் அரசியல் செய்வேன். திமுக அரசியலை அடியோடு எதிர்க்கிறேன். ஏனென்றால் அது ஒரு விஷம். தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க விரும்பினால் அது நன்றாக இருக்காது. 1956 நிகழ்வை கருணாநிதி குறிப்பிட்டு இருப்பார். நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. நான் பேசியது தவறு கிடையாது. அண்ணாவை தர குறைவாக பேசவில்லை. சரித்திரத்தில் இருந்ததை குறிப்பிட்டு இருக்கிறேன்” என்றார்.

Chella

Next Post

”இங்கிருந்துதான் கோவிட் பரவியிருக்க கூடும்”..!! ஆராய்ச்சிகளுக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா..!!

Thu Sep 21 , 2023
முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவின் வுஹான் நகரில் உள்ள வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆய்வகம் வழங்கத் தவறியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் தொடங்கிய மறுஆய்வுக்குப் பிறகு, நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்த முயல்வதாக அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது. வுஹானில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் […]

You May Like