Captain cool என்றும் தல என்றும் செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் வரலாற்றில் கோபமடைந்த தருணங்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகேந்திர சிங் தோனி’ இந்த பெயரைக் கேட்டாலே இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலும் ‘மிஸ்டர் கூல்’, ‘கேப்டன் கூல்’ என சொல்வது உண்டு. இதற்குக் காரணம் எதையும் கூலாக ஹேண்டில் செய்யக்கூடிய தல தோனியின் கேப்டன் சியும், முகத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் புன்னகையும் தான். ஆனால், தோனிக்கு கோபம் வருகிறது. இது ஒரு அரிதான நிகழ்வு. தோனியின் கோபத்தால் வீரர்கள் முதல் நடுவர்கள் வரை அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்படிப்பட்ட ‘மிஸ்டர் கூல்’ தோனி ஐபிஎல் வரலாற்றில் உணர்ச்சிவசப்பட்டு கோபமடைந்த சில தருணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானுக்கு எதிராக சேஸிங் செய்தது. அப்போது பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஃபுல் டாஸாக சான்ட்னரின் இடுப்புக்கு மேல் வந்தது. அந்த பந்தை நோ-பால் ஆக நடுவர் கொடுப்பார் என எதிர்பார்த்தபோது, நோ-பால் கொடுக்கப்படவில்லை. அப்போது மைதானத்திற்குள் நடந்து சென்று நடுவரிடம் தோனி கோபத்துடன் வாதிட்டார்.
2020ம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நடுவர் வொயிட் கொடுத்ததற்கு தோனி கோபப்பட்டது பேசு பொருளானது. ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ஷர்துல் தகூர் 19வது ஓவரை வீசியபோது 2வது பந்து வொயிட் ஆனது. அடுத்த பந்தும் வொயிட் என அம்பயர் கொடுக்க முன்வர, உடனே தோனி கோபமடைந்தார். அப்போது அம்பயர் வொயிட் கொடுக்கவில்லை. இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், 202ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தீபக் சாஹர் வீசிய 18வது ஓவரில் டாம் குரான் டிப் கேட்ச் ஆனார். நடுவரும் அவுட் கொடுத்தார். பின்னர் ரீப்ளேயில் பார்த்தபோது, பந்து கீழே குத்திய பின்னரே அதை தோனி பிடித்தது உறுதி செய்யப்பட்டதால் அவுட் திரும்பப்பெறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தோனி ராஜஸ்தான் அணிக்கு ரிவ்யூ ஆப்ஷன் இல்லாமல் எப்படி 3வது நடுவரிடம் ரீப்ளே செய்ய சொன்னீர்கள் என நடுவரிடம் கோபப்பட்டார்.
அந்தவகையில், நடப்பாண்டில் தோனியின் கோபத்தின் ஆழத்தை அறிந்தவர் மொயீன் அலி. இந்த ஆண்டு ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தோனியின் கோபம் தெரிந்தது. மொயின் அலியிடம் இருந்து ஒரு மிஸ் ஃபீல்ட்.கீப்பராக இருந்த தோனியிடம் பந்து வீசியதில் மொயீன் அலியும் தவறு செய்தார். போட்டியின் முக்கியமான தருணம் இது. இந்த நேரத்தில் மொயீன் அலி மீது தோனி கடும் கோபத்தில் இருந்தார். இந்த சீசனில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இதுவே முதல்முறை.
டுவைன் பிராவோ சென்னை அணியின் சிறந்த பந்து வீச்சாளர். தோனியின் கோபத்தின் சூடு பிராவோவுக்கும் தெரியும். இந்த சம்பவம் 2021 ஐபிஎல் போட்டியில் நடந்தது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிராவோவின் குறுக்கீடு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும், இதனால் கேட்ச் கைவிடப்படும். இது மிகவும் எளிமையான கேட்ச். கேட்சை கைவிட்ட தோனி, பிராவோ மீது கடும் கோபத்தில் இருந்தார்.