“ இது கலவரத்தை ஏற்படுத்தும்..” சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் குறித்து குஷ்பு கண்டனம்…

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான படைப்புகள் மூலம் பிரபலமானவர் லீனா மணிமேகலை.. கவிஞரான இவர் ஆவணப்படங்கள், ஒரு சில திரைப்படங்களை இயக்கி உள்ளார்.. தேவதைகள், பலிபீடம் போன்ற ஆவணப்படங்களையும், மாடத்தி, செங்கடல் ஆகிய படங்களையும் அவர் இயக்கி உள்ளார்.. குறிப்பாக லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.. குறிப்பாக சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 15-க்கும் மேற்பட்ட விருதுகளை இப்படம் வென்றுள்ளது..

இந்நிலையில் காளி என்ற ஆவணப்படத்தை லீனா மணிமேகலை இயக்கி உள்ளார்.. இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது..அந்த போஸ்டரில் கையில் எல்ஜிபிடி கொடி, சிகரெட் உடன் காளி கெட் அப்பில் பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.. ஆனால் இந்து கடவுளை அவமதிக்கும் வகையிக் இருப்பதாக கூறி பாஜகவினர் இந்த போஸ்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. அவரின் ட்விட்டர் பதிவில் “ படைப்பாற்றலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எந்தவொரு சிறுபான்மையினரின் கடவுளை இந்த வடிவத்தில் வழிபடுவதை சித்தரிக்கும் படைப்பு சுதந்திரத்தை இதே படைப்பாளிகள் ஒருபோதும் கையில் எடுக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு குழப்பம் இருக்கும். கலை என்று அழைக்கப்படும் இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

பெண்களுக்கு சணல் தயாரிப்பு குறித்து இலவசமாக பயிற்சி...! தேசிய சணல் வாரிய துணை இயக்குனர் அறிவிப்பு...!

Tue Jul 5 , 2022
தேசிய சணல் வாரியம் சார்பில் பெண்களுக்கு சணல் தயாரிப்பு குறித்து இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தேசிய சணல் வாரியத்தின் சென்னை அலுவலக துணை இயக்குனர் அய்யப்பன் தெரிவித்துள்ளார். தேசிய சணல் வாரியம் சார்பில் ராணுவ அதிகாரிகளின் மனைவிகளுக்கான சணல் தயாரிப்பு பயிற்சி சென்னையை அடுத்த ஆவடியில் நடைப்பெற்றது. இதில் ராணுவ அதிகாரிகள் குடும்ப நல சங்கத்தின் தலைவி சோனம் சோலன்கி, நிலைய கமாண்டர் கர்னல். பூபேந்தர் சோலன்கி ஆகியோர் […]

You May Like