fbpx

பெண்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் வாகனப்புகை!… எலும்புகள் விரைவில் தேய்மானம் அடையும்!… அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி!

வாகனப்புகையால், வயது முதிா்ந்த பெண்களுக்கு விரைவில் எலும்பு தேய்மானம் அடையும் என நியூயார்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமொிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனா். அந்த ஆய்வில் வாகனப்புகையில் இருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு, மற்ற வயது பெண்களை விட, மாதவிடாய் நின்ற வயது முதிா்ந்த பெண்களின் கீழ் முதுகுத் தண்டை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனா். தரமில்லாத காற்று அல்லது நச்சு நிறைந்த காற்று, எலும்புகளை மிக மோசமாகப் பாதிக்கிறது என்றும், எலும்புகள் அதிகம் தேய்வதற்கு முக்கிய காரணமாக நைட்ரஜன் ஆக்ஸைடு இருக்கிறது என்பதை தாங்கள் முதன் முதலாக கண்டறிந்திருப்பதாகவும், அதிலும் குறிப்பாக அது முதுகெலும்பை அதிகம் பாதிக்கிறது என்றும் கொலம்பியா மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் என்ற அமைப்பின் என்வைரென்மென்டல் ஹெல்த் சைன்சஸ் துறையின் இணை ஆராய்ச்சி விஞ்ஞானியான டிடியா் ப்ரடா கூறியுள்ளார்.

அதாவது, தனிப்பட்ட முறையில் காற்றை மாசுபடுத்தும் காரணிகளை ஆய்வு செய்ததில், அந்த காரணிகள் முதியவா்களின் எலும்புகளின் தாது அடா்த்தியைப் பாதித்து, எலும்புப்புரை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தொிவித்திருக்கின்றன. இகிளினிக்கல் மெடிசின் என்ற பத்திாிக்கையில் வந்திருக்கும் இந்த புதிய ஆய்வானது, வயதான பெண்மணிகளின் எலும்புகளுக்கும், காற்றில் இருக்கும் நச்சுத் தன்மைக்கும் இடையேயான தொடா்பை முதன் முதலாக ஆய்வு செய்து, காற்று மாசுபாடு அவா்களுடைய எலும்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக, மாதவிடாய் நின்ற 161, 808 வயது முதிா்ந்த பெண்களைத் தோ்ந்தெடுத்தனா். அவா்கள் மதிப்பீடு செய்த காற்றின் நச்சு அளவில் (PM10, NO, NO2, மற்றும் SO2) இந்தப் பெண்களை இருக்குமாறு செய்து, அந்த பெண்களின் எலும்புகளின் (BMD, முழு உடல், இடுப்பு, கழுத்து மற்றும் முதுகெலும்பு) தாது அடா்த்தியை முதல் ஆண்டு, இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஆறாவது ஆண்டு என்று தொடா்ந்து மதிப்பிட்டனா். ஆறு ஆண்டு கால ஆய்வின் முடிவில், காற்றில் இருந்த நைட்ரஜன் ஆக்ஸைடானது, இந்த பெண்களின் முதுகெலும்பின் தாது அடா்த்தியை ஒவ்வொரு ஆண்டும் 1.22 சதவீதம் அளவிற்கு குறைத்து வந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனா். இது மற்ற காரணிகள் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை விட இரண்டு மடங்காகும் என்றும் கூறப்படுகிறது.

Kokila

Next Post

மேலாடை இல்லாமல் பணிபுரியும் அமெரிக்க டிக் டாக் பிரபலம்!... ஒரு நாளைக்கு ரூ.1.80 லட்சம் சம்பளம்!...

Mon Mar 13 , 2023
மேலாடை இல்லாமல் வீட்டு வேலைகள் செய்துவரும் அமெரிக்காவை சேர்ந்த டிக்டாக் பெண் பிரபலம், ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,80,000 சம்பளமாக பெறுகிறார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள டாம்பா கவுண்டியில் சம்மி என்கிற டிக்டாக் செய்து வரும் பெண் ஒருவர், மேலாடை இல்லாமல் அரை நிர்வாணத்துடன் வீட்டுவேலைகளை செய்வதற்கு ஒரு மணி நேரம் சம்பளமாக (300 டாலர்கள்) இந்திய மதிப்பின் படி, ரூ.26,000 பெறுகிறார். இவ்வாறாக நாள் ஒன்றுக்கு 7 மணி […]

You May Like