fbpx

அம்பாசமுத்திரம்: ஆட்டோ விபத்தில் பலியான ஐந்து வயது மாணவன்..! டிரைவரின் அஜாக்கிரதையால் நடந்த சோகம்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்தது. அதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிக பாரத்தை ஏற்றி சென்றதால் இந்த விபத்து நடந்ததாக பேசப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலுவதற்காக, அதன் சுற்றுவட்டார பகுதியான அடைய கருங்குளம், சிவந்திபுரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து மாணவர்களை விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுந்தர் என்பவர் வழக்கமாக தனது ஆட்டோவில் ஏற்றி செல்வார்.

இந்நிலையில் இன்று 11 மாணவர்களை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். ஆட்டோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. அதிலிருந்த மாணவ, மாணவிகள் பயத்தில் அலறினர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த சித்திரைநாதன் என்பவருடைய மகன் பிரதீஷ் என்கிற 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 3 மாணவ மாணவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அதிக பாரம் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள். 11 மாணவர்கள் ஏறி சென்ற ஆட்டோவில் 8 மாணவர்கள் பலத்த காயமடைந்ததும், ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததும் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Post

புல்வாமா தாக்குதல்..!! வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்..!!

Wed Feb 14 , 2024
புல்வாமா தாக்குதல் வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்றபோது […]

You May Like