fbpx

வெளியே செல்லும்போது குடையுடன் செல்லுங்க..! இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில தினங்களாக சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், மேலும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், மேலும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

வருகிறது அட்டகாசமான திட்டம்...! இனி இதற்கெல்லாம் சிரமப்பட தேவையில்லை...!

Fri Sep 1 , 2023
நாமக்கல்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும்‌ ஆப்டிகல்‌ பைபர்‌கேபிள்‌ மூலமாக இணைக்கப்படவுள்ளன. இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்திக்குறிப்பில்‌: தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும்‌ அதிவேக இணையதள இணைப்பு வழங்க பாரத்‌ நெட்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டம்‌, தமிழ்நாடு பைபர்‌ நெட்‌ கார்ப்பரேஷன்‌ மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ ஆப்டிகல்‌ பைபர்‌ கேபிள்‌ மூலமாக அனைத்து வட்டாரங்களும்‌, கிராம ஊராட்சிகளும்‌ இணைக்கப்பட உள்ளன. ஆப்டிகல்‌ பைபர்‌ கேபிள்கள்‌ 85 […]

You May Like