சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் காவ்ஷிகன் – நோரா. கடந்த 2016இல் சந்தித்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நோரா மீது காவ்ஷிகனுக்கு காதல் வந்ததால், 2020இல் அவரிடம் தனது காதலை சொல்லியிருக்கிறார். ஆனால், தனக்கு காதல் இல்லை நட்பாக மட்டுமே பழகலாம் என்று சொல்லி இருக்கிறார் நோரா. ஆனாலும், நண்பர்களாக தொடர்ந்து பழக முடியாமல் தவித்திருக்கிறார் காவ்ஷிகன். காதலியாக மட்டுமே அவரை பார்க்க முடிந்திருக்கிறது. இதனால், சில நாட்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நண்பனாக மட்டுமே பார்க்க முடியும் என்று நோரா உறுதியாக சொல்லிவிட்டதால், உணர்வு ரீதியாக தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்று நோரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளார் காவ்ஷிகா.
இதனால், அவரை சமாதானப்படுத்தி மருத்துவரிடம் கவுன்சிலிங் செல்லலாம் என்று அழைத்துச் சென்று இருக்கிறார். இதனால், சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருக்கிறார் காவ்ஷிகன். இருவரும் தொடர்ந்து மருத்துவரிடம் கவுன்சிலிங் சென்றிருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு மேலாகியும் கூட காவ்ஷிகாவின் மாறாமல் இருந்திருக்கிறது. இதனால் வேறு வழி இல்லாமல் அவரை விட்டு விலகியுள்ளார் நேரா. இதில், மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் காவ்ஷிகன். அதனால், தொழிலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. தனக்கு மன அழுத்தம் தந்ததற்காகவும், இதனால், தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் தோழி நோராவிடம் நஷ்ட ஈடு கேட்க முடிவு செய்துள்ளார். தற்போது, ரூ.24 லட்சம் தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று நோரா மீது காதல் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.