fbpx

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நா.த.க முன்னாள் நிர்வாகிக்கு மாவுகட்டு..!

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிக்கு மாவு கட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில் பங்கேற்ற 17 மாணவிகளில் 13 பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை பள்ளி மாணவிகளுக்கான என்சிசி பயிற்சி நடைபெற்றது. இதற்காக, 17 மாணவிகள் பள்ளியிலே தங்கி பயிற்சி பெற்றனர்.

அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியான சிவராமன் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். இரவு நேரங்களில் மாணவிகளை மிரட்டி சிவராமன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, 12 வயது சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து பள்ளி தாளாளர், முதல்வர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள என்.சி.சி. பயிற்சியாளரும், நாதக முன்னாள் நிர்வாகியுமான சிவராமனுக்கு மாவுகட்டு போடப்பட்டது. கோவையில் பதுங்கி இருந்த அவரை பிடிக்கச் சென்றபோது தப்பி ஓடியதில் காலில் முறிவு ஏற்பட்டதாகத் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

English Summary

case of sexually assaulting a schoolgirl NCC Coach and NTK Sivaram arrested

Vignesh

Next Post

தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்..!! எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

Mon Aug 19 , 2024
The India Meteorological Department has said that 11 districts of Tamil Nadu are likely to receive heavy rain today, while Coimbatore and Nilgiri districts are likely to receive very heavy rain.

You May Like