அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று பொது விடுமுறை அறிவித்ததை மீறி, ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காத 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதால், நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், பள்ளி, கல்லூரிகள் உட்பட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், அரசு அறிவிப்பை மீறி தேசிய விடுமுறை நாளான இன்று, பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்காமல் இருந்துள்ளன. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more ; Health Tips | தலைவலிக்கு அடிக்கடி மாத்திரை எடுக்குறீங்களா? ரொம்ப ஆபத்து..! இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..