fbpx

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு..!! த்ரிஷா விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை..!!

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், மன்சூர் அலிகான் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார்.

மன்சூர் அலி கானின் இந்த பேச்சு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் ஐ.பி.சி சட்டபிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களை பயன்படுத்தி மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யவும் தமிழ்நாடு டி.ஜி.பிக்கு அறிவுறுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும் இதுபோன்ற கருத்துகள் கண்டிக்கப்பட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

மக்களே..!! சிக்கன் பிரியாணி சாப்பிடும்போது கவனம்..!! திருவாரூரில் அதிர்ச்சி..!!

Mon Nov 20 , 2023
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் முனியாண்டி விலாஸ் என்ற அசைவ உணவகம் உள்ளது. இதில், கீழப்பாளையூர் பகுதியைச் சேர்ந்த வீரையன் (64), மஞ்சக்குடி முருகேசன் (50), மேல உத்தரங்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (60) ஆகிய மூவரும் மதிய உணவாக சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர். அன்றிரவு அவர்களில் வீரையனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இடைவிடாத வயிற்றுப்போக்கு காரணமாக குடவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]

You May Like