மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் அரசு வழங்கிய டிவி, மின்விசிறியை உடைத்ததால் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் கே.பாலு உட்பட கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்று மின் கட்டண உயர்வை திரும்பப்பெறுமாறும், மாதத்துக்கு ஒரு முறை மின் கணக்கிடுமாறும் கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் அரசு வழங்கிய டிவி, மின்விசிறியை உடைத்ததால் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழலைக் குறைத்தாலே மின் சாரத் துறை லாபத்தில் இயங்கும். அதிமுக ஆட்சியின்போது மின்சார கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது என்று சொன்ன ஸ்டாலின் தற்போது கட்டணத்தை ஏற்றி வருகிறார். இந்த உயர்வை திரும்பப் பெறும்வரை பாமக தொடர் போராட்டங்களை நடத்தும் என கூறினார்.