ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.. ஆர்.எஸ்.எஸ் உடையணிந்து, பேண்டு வாத்தியத்துடன் ஊர்வலம் செல்ல அனுமதி கோரி தமிழக காவல்துறையிடம் விண்ணப்பித்தாகவும், அதில் பெரும்பாலான இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.. மேலும் பல இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்கு தொடரப்பட்டுள்ளன..
அந்த வகையில் சென்னையை சேர்ந்த சுப்பிரமணிய என்பவர், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளஞ்செழியன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது மனுதாரர்கள் அளித்த மனு பரிசீலனையில் உள்ளதாகவும், அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து வரும் 22-ம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்..