fbpx

Breaking: நாம் தமிழர் கட்சி சீமான் மீது இரண்டு மாவட்டத்தில் FIR வழக்கு பதிவு…!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காரை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் மருது கணேஷ், திமுக நிர்வாகி ரகு, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் உமாபதி ஆகியோர் தனித்தனியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதேபோல தமிழகம் முழுவதும் இருக்கிற இடங்களில் திமுகவைச் சேர்ந்த நபர்களும் திராவிட கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் புகார் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் வழக்குப்பதிவு. பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தி.க. நிர்வாகி வேல்முருகன் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல மயிலாடுதுறையில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

English Summary

Cases registered against Seeman in two districts

Vignesh

Next Post

டெல்டா மாவட்டங்களுக்கு வார்னிங்..!! கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!! இந்த 5 மாவட்டங்கள் தான் டார்கெட்..!!

Fri Jan 10 , 2025
The Chennai Meteorological Department has stated that there is a possibility of heavy rain in Thanjavur, Thiruvarur, Nagapattinam, Mayiladuthurai and Pudukkottai districts on January 12th.

You May Like