fbpx

சாதிவாரி கணக்கெடுப்பு..!! சட்டப்பேரவையில் தீர்மானம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி..!!

“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்” என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், ”சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சனை குறித்து உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் தகுந்த பதிலை அளித்திருக்கின்றனர். இந்தப் பிரச்சனைக்கு நல்ல தீர்வு என்று சொன்னால், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் எடுக்கப்பட வேண்டும்.

எனவே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவர உள்ளோம். அதற்கு ஜி.கே.மணி ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுகொள்கிறேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக, பள்ளிக்கல்வித்துறை, வருமானத் துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாததின்போது பேசிய பாமக உறுப்பினர் ஜிகே மணி, ”10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் வன்னியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வட மாவட்டங்களில் மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக வன்னியர்கள் பின்தங்கி இருப்பதே காரணம். எனவே அவர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு இது தொடர்பான வழக்கு நீதிமன்றங்களில் நடந்த போது மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதாக முதலமைச்சர் மு.கஸ்டாலினும் அமைச்சர்களும் தெரிவித்தனர். தொடர்ந்து இந்தப் பிரச்சனையை ஜி.கே.மணி பேசும்போது சாதிவாரி கணக்கெடுப்பிற்கும் மாநில அரசு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் சம்பந்தமில்லை. இரண்டும் தனித்தனியான பிரச்சனைகள் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அவரை பேச அனுமதிக்காததால் பாமக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Read More : பத்திரப்பதிவு செய்யப்போறீங்களா..? இந்த விஷயத்தை நியாபகம் வெச்சிக்கோங்க..!! அப்புறம் சிக்கல் உங்களுக்குத்தான்..!!

English Summary

Chief Minister Mukherjee Stalin has announced that a resolution will be brought in this session of the Legislative Assembly to urge the central government to speed up the castiwari census.

Chella

Next Post

இந்திய ராணுவ வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? முழு லிஸ்ட் இதோ!

Mon Jun 24 , 2024
There are soldiers from the Indian Army who have given their lives clearly in many important moments. Do you know the monthly salary of such people?

You May Like