காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டத்திற்கு குழுவின் தலைவர் வினித் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 3ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கர்நாடக அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில், நடக்க இருக்கும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்டுகிறது.
இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி நடக்க இருக்கும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்திலும் கர்நாடக அரசு 3ஆயிரம் கன அடி வீதம் நீரை திருந்து விடும் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கையும் அதற்கான காரணத்தையும் வைக்கும் என்று தெரிகிறது, மேலும் ஏற்கனவே ஆணையம் உத்தரவின் படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டிருக்கிறதா, திறந்து விடவில்லை என்றால் அதற்கான விளக்கம் கேட்கப்படும், அதன் பின்பு நிலுவையில் உள்ள நீரின் அளவு, அடுத்து எவ்வளவு தண்ணீர் திறக்கலாம் போன்றவை குறித்து விவாதிக்கப்படும். இந்த குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை அனுப்புவர், அதன்பிறகு ஆணையம் புதிதாக உத்தரவு பிறப்பிக்கும்.