தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், இடதுகரை கால்வாய் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள டோமலாபெண்டா பகுதியில் குகை கால்வாயில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கால்வாய் குகையின் மேல்புறம் இடிந்து விழுந்தது.
சுமார் 3 மீட்டர் தொலைவுக்கு இடிந்து விழுந்ததால், குகையின் ஒருபகுதியில் இருந்த தொழிலாளர்கள் பதறியடித்து வெளியே ஓடிவந்தனர். மற்றொரு பகுதியில் இருந்த தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். மொத்தம் 43 தொழிலாளர்கள் வெளியே வந்த நிலையில் 7 தொழிலாளர்கள் குகைக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.சனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தொழிலாளர்களை பத்திரமாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி நாகர்கர்னூல் எஸ்பி வைபவ் கெய்க்வாட் கூறுகையில், “இடதுகரை கால்வாய் குகையில் 4 நாட்களுக்கு முன்பு பணி தொடங்கியது. இன்று குகையின் 14 கிலோமீட்டர் தூரத்தில் 3 மீட்டர் பரப்பில் இருந்த மேற்புறம் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இந்த பணியை மேற்கொண்டு வரும் நிறுவனம் கொடுத்த தகவலின்படி, மொத்தம் 50 தொழிலாளர்கள் உள்ளே இருந்துள்ளனர். அதில் 43 பேர் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், 7 பேர் மட்டும் உள்ளே சிக்கிக் கொண்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!