fbpx

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…! புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு…!

வருமான வரித் துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்பவும், வருமான வரித் துறை அதன் தேசிய இணையதளமான www.incometaxindia.gov.in என்ற தளத்தை மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வசதிகளுடன் புதுப்பித்துள்ளது.

இந்த வலைத்தளம் வரி மற்றும் வரி தொடர்பான பிற தகவல்களின் விரிவான தகவல்களுடன் செயல்படுகிறது. இது நேரடி வரிச் சட்டங்கள், தொடர்புடைய பிற சட்டங்கள், விதிகள், வருமான வரி சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் ஆகியவற்றை வழங்குகிறது. புதுப்பிக்கப்பட்ட இணையதளம் மொபைல் போன்களிலும் எளிதில் செயல்படும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

புதிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளுடன் உள்ளடக்கத்திற்கான ‘மெகா மெனு’வையும் (பெரிய தேர்வுப் பட்டியல்) இந்த இணையதளம் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இணையதளம் வரி செலுத்துவோருக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குவதில் மற்றொரு முக்கிய முன்முயற்சியாகும்.

Vignesh

Next Post

இறந்துபோன பின் மீண்டும் எழுந்து வந்த முதியவரால் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…..! என்ன நடந்தது…..?

Sun Aug 27 , 2023
கேரள மாநிலத்தில், உயிரிழந்து ஏழு நாட்களே ஆன நிலையில், அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்ததால், உறவினர்கள் முதல், காவல் துறையினர் வரையில் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதாவது, கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இருக்கின்ற ஆலுவா என்ற பகுதியைச் சேர்ந்த ஆண்டனி (68) என்பவர் மரம் வெட்டும் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் திருமணம் ஆகாதவர் என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக, உறவினர்களை விட்டு இவர் ஒதுங்கி […]

You May Like