fbpx

2023-24 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் முன்கூட்டியே வெளியீடு…!

2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களை முன்கூட்டியே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கைகள் 2023 பிப்ரவரி 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டது. இவை 2023 ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வரும். வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும் வகையிலும் எளிதாக கணக்கு தாக்கல் செய்வதை மேம்படுத்தவும், புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. வருமான வரி சட்டதிருத்தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை வெளியிடப்பட்ட படிவங்கள் வருமான வரித்துறையின் www.incometaxindia.gov.in. என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.

Vignesh

Next Post

பிபிசி அலுவலகங்களில் 3-வது நாளாக தொடரும் சோதனை..!! சிக்கியது என்ன..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Thu Feb 16 , 2023
பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிப்.14ஆம் தேதியன்று காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இன்றும் 3-வது நாளாக தொடர்ந்து நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிபிசி அலுவலகத்தில் வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். […]

You May Like