fbpx

ரெடியா இருங்க…! வெளியான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பட்டியல்…! முழு விவரம் இதோ…

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பட்டியலை சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி மார்ச் 21-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறும். காலை 10.30 மணிக்குத் தேர்வு தொடங்கி நண்பகல் 1.30 மணிக்கு நிறைவடையும். தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும். மேலும் தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பை cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுகளை ஜனவரி 2-ம் தேதி முதல் தொடங்கவும், செய்முறைத் தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள் மற்றும் அக மதிப்பீடுகளை பிப்ரவரி 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். செய்முறைத் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்ளாதபட்சத்தில், Absent என குறிப்பிட வேண்டும். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக மாணவர் தேர்வில் கலந்து கொள்ளத் தவறினால் சி.பி.எஸ்.இ இயக்குநரகம் அறிவிக்கும் தேதியில் மறுதேர்வு நடத்த வேண்டும்.

Vignesh

Next Post

நாளை கடைசி நாள்...! வெறும் 2 நிமிடம்... ஆதாருடன் இணைத்து விடலாம்...! எப்படி தெரியுமா...?

Fri Dec 30 , 2022
மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் […]

You May Like