fbpx

CBSE தேர்வு 2024: “தேர்வு தேதிகளில் மாற்றம் குறித்த போலியான நோட்டீஸ்”. தேர்வு வாரியம் எச்சரிக்கை.!

சிபிஎஸ்இ பொது தேர்வுகள் தற்போது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் குறித்து பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான தகவல்களுக்கு எதிரான சுற்றறிக்கையை சிபிஎஸ்இ வெளியிட்டு இருக்கிறது.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போலியான ஒரு நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு எதிராக சிபிஎஸ்சி தனது ‘X’ வலைதள பக்கத்தில் சுற்றறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளது. ‘CBSE FACT CHECK’ என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தனது சுற்றறிக்கையை பதிவு செய்திருக்கிறது சிபிஎஸ்இ. மேலும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நோட்டீஸ் போலியானது என்றும் அதுபோன்ற எந்த முடிவும் வாரியத்தால் எடுக்கப்படவில்லை என்றும் தனது சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கிறது.

விவசாயிகளின் போராட்டம் தொடர்பான பிரச்சனையால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு போலியான ஒரு நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் அந்த அறிக்கையில் மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிரமங்களை சந்தித்தால் தங்கள் தேர்வு மையங்கள் அல்லது தேதியை மாற்றுவதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கையை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிராகரிக்குமாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ இதுபோன்ற எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்த தகவல்களை அறிவதற்கு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களை பின்பற்றுமாறு மாணவர்களையும் பெற்றோரையும் சிபிஎஸ்இ அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாக போராட்டங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து குறைவாக தேர்வுக்கு புறப்படுமாறு அறிவுறுத்தி இருந்தது. மேலும் டெல்லியில் உள்ள மாணவர்கள் மெட்ரோவை பயன்படுத்துமாறு சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Next Post

மகிழ்ச்சி...! ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம்...! தமிழக அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

Sat Feb 17 , 2024
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மசூர் பருப்பையும் விநியோகிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க, தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, […]

You May Like