சிசிலி கடற்கரையில் 22 பேரை ஏற்றிச் சென்ற பேய்சியன் சொகுசு படகு புயலினால் நீரில் மூழுகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
22 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பிரித்தானியக் கொடியுடன் கூடிய சொகுசுப் படகு இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் மூழ்கியது. போர்டிசெல்லோ துறைமுகத்தில் இருந்து அரை மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பல், அந்தப் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக மூழ்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பிரிட்டிஷ் தொழில்நுட்ப அதிபர் மைக் லிஞ்ச் உட்பட 6 பேர் காணாமல் போயினர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொலைவில் உள்ள ஒரு வில்லாவில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் 200-மீட்டர் தொலைவில் புயலினால் படகு மெதுவாக மறைந்து வருவதை காட்டுகிறது.
இதுகுறித்து, வில்லாவின் உரிமையாளர் கூறுகையில், அறுபது வினாடிகளில் கப்பல் காணாமல் போன காட்சிகள் சிசிடிவியில் இடம்பெற்றுள்ளன. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சுமார் இருபது கேமராக்களில் ஒன்று மட்டும் காற்று மற்றும் மழையால் தொந்தரவு செய்யவில்லை. என்ன நடக்கிறது என்பதை தெளிவாக பார்க்கலாம். மிகக் குறைந்த விநாடிகளில் படகு காணாமல் போனது என்றார்.
Read more ; ஈரான் பேருந்து விபத்தில் 28 யாத்திரீகர்கள் பலி..!!