Annamalai 2024: தேர்தல் சமயத்தில் சிசிடிவி ஆதாரங்கள், மற்றும் ஆடியோ பதிவுகள் வெளியிடப்படும்.
மதுரை மேற்கு தொகுதியில், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நடைபெற்றது. இதில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை; தமிழகத்தில் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேர்மையான அரசியல் மாற்றத்திற்காக, இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசியலைச் சுத்தம் செய்து, சாமானிய மக்களுக்கான அரசியலைக் கொண்டு வர, ஊழலை, அடாவடித்தனத்தை, குடும்ப அரசியலை, மக்களை வெறும் வாக்கு வங்கிகளாகப் பார்க்கும் மலிவான அரசியலை, தமிழகத்தில் இருந்து அகற்றுவதற்கான முதற்படியாக இந்த பாராளுமன்றத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்முடைய குழந்தைகள் ஒரு நல்ல சமுதாயத்தில், ஒளிமயமான தமிழகத்தில், உலகின் முதன்மை நாடாக மாறிக் கொண்டிருக்கும் நமது இந்திய நாட்டில் நன்றாக வாழ வேண்டுமென்றால், வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மோடி அவர்களை நாம் தேர்ந்தெடுக்கத் தவறக்கூடாது என்பதில் அனைத்து மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்.
தேர்தல் சமயத்தில் சிசிடிவி ஆதாரங்கள், மற்றும் ஆடியோ பதிவுகள் வெளியிடப்படும். முன்னாள் அமைச்சர் என்னை லேகியம் விற்பவர் எனக் கூறுகிறார். பிப். 27-ல் பல்லடத்தில் மிகப்பெரிய லேகியம் விற்கப்படும். இதை பங்காளி (அதிமுக) கட்சியினர் வாங்கி குடித்தால் நோய் முழுயையாக குணமாகும். இது பழைய பாஜக இல்லை. வட்டியும் முதலுமாக திரும்ப கொடுக்கும் கட்சி. நான் நல்லவன் இல்லை. அரசியலில் நல்லவனுக்கு வேலையில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நமக்கான தேர்தல். மோடியை மீண்டும் பிரதமராகக்க வேண்டும் என்றார்.
English Summary : CCTV sources, and audio recordings during elections