இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த நிலையில், அவரது வாழ்க்கையை ஒட்டி பல்வேறு சுவாரஸ்யங்களும் இன்று நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில் அவரின் இறப்பு தேதி குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரபலத்தின் தீர்க்க தரிசனம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. ஆங்கில ராக் இசைக்குழுவான தி கியூரின் (The Cure) தலைவரான ராபர்ட் ஸ்மித் 10 ஆண்டுகளுக்கு முன்பு ராணியின் இறப்பு தேதியை கணித்தது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
2012 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த விழாவில் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது அரச குடும்பத்தை பற்றி பேசிய அவர் “ செப்டம்பர் 7 அன்று ராணி இறந்துவிடுவார், மேலும் ஒரு பெரிய எழுச்சி ஏற்படும், நான் மன்னராக்ககப்படுவேன்” என்று கூறினார்.
ஸ்மித்தின் இந்த கருத்து, பத்து வருடங்கள் மற்றும் ஒரு நாளுக்கு பிறகு உண்மையாகி உள்ளது.. ராணி எலிசபெத் செப்டம்பர் 8-ம் தேதி உயிரிழந்தார்.. ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதனை ஸ்மித்தின் தீர்க்கதரிசனம் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.. டிக்டாக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ இப்போது 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள், 243,000 விருப்பங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கருத்துகளைப் பெற்றுள்ளது.