மத்திய பட்ஜெட் 2023 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று அறிவித்தார்.
இதுவரை 2.5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு வரி கிடையாது என்று நடைமுறை இருந்தது. 2.5லட்சத்திலுருந்து 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு 5சதவீத வரியும், 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய வரிமுறையை பின்பற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு 7லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதே போல 15 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளோர் 1.5லட்சம் வரி செலுத்தினால் போதும் என்றும், ஆண்டு வருமானம் 9 லட்சம் வரை இருந்தால் 45 ஆயிரம் வரி செலுத்தினால் போதும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செல்போன் உதிரிபாக இருக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்படும், டிவி பனெல்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் போன்ற அறிவிப்பால் டிவி, கேமரா, செல்போன் விலை குறைய வாய்ப்புள்ளது.
மேலும் புகையிலைப் பொருட்கள் மீதான வரி 16% வரை உயர்த்தப்படுகிறது. இதனால் சிகிரெட் போன்றவையின் விலை அதிகரிக்கப்படும்.
தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு, இதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இந்தியாவில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.