2022-23-ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 7 வரை நீட்டித்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம். இதற்கு முந்தைய காலக்கெடு அக்டோபர் 31 ஆகும்.
நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்ய அக்டோபர் 7 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்குப் புத்தகங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டாளர்களுக்கும் இந்த நீட்டிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.