தங்கம், வெள்ளி, பிளாட்டினம், ரப்பர், சிகரெட் உள்ளிட்ட பொருள்களின் விலை உயரும் என்றும் கேமரா, செல்போன், தொலைக்காட்சி, எத்தில் ஆல்கஹால் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் குறையும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். புதிய அறிவிப்பின்படி, தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆண்டிற்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்று அறிவித்தார். மேலும் ஆண்டுக்கு 9 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு ரூ.45,000 வரை வரி செலுத்தினால் போதுமானது என்றும் நடைமுறையில் உள்ள தனிநபர் அடிப்படை வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கான கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்றும் இந்தியா 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் புதிய வரி உயர்வால் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், செம்பு, ரப்பர், சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என்றும் வரி குறைக்கப்பட்டுள்ள கேமரா, செல்போன், தொலைக்காட்சி, எத்தில் ஆல்கஹால் உள்ளிட்ட பொருள்களுக்கு விலை குறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகள் * போக்குவரத்து துறைக்கு ₹78,000 கோடி ஒதுக்கீடு. * மீன்வளத்துறைக்கு ₹6,000 கோடி ஒதுக்கீடு. * பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ₹79,000 கோடி ஒதுக்கீடு. * பழங்குடியின மேம்பாட்டுக்கு ₹15,000 கோடி ஒதுக்கீடு. * கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி ₹5,300 கோடி. * மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ₹1.3 லட்சம் கோடி * மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும். * ரூ. 15,000 கோடி அடுத்த 3 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயித்து பழங்குடியினருக்கு திறன் மேம்படுத்தும் பயிற்சி வழங்கப்படும். * இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹7000 கோடி ஒதுக்கீடு. * கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும். * மீன்வளத்துறைக்கு 6000 கோடி. * விவசாயத்துறை போலவே மீனவர்கள் பயன்பெற கூட்டுறவு மாடல். * மீன்வளத்துறை திட்டங்களுக்கு 6000 கோடி ஒதுக்கீடு. * மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க ரூ7,000 கோடி நிதி ஒதுக்கீடு. அடிப்படை கட்டமைப்பு துறைக்கு மட்டும் 33% நிதி ஒதுக்கீடு. அதன்படி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ₹10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற கட்டமைப்புக்கு ₹10,000 கோடி, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ₹78,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு ₹2,04,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும்.