fbpx

ரூ.1255.59 கோடியில் வடக்கு பாட்டியாலா புறவழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்…!

ரூ.1255.59 கோடியில் வடக்கு பாட்டியாலா புறவழிச்சாலை அமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், 28.9 கி.மீ, 4-வழி அணுகல்-கட்டுப்பாட்டு வடக்கு பாட்டியாலா புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ .1,255.59 கோடிக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தார். இந்தத் திட்டம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை கணிசமாகக் குறைப்பது, பிராந்திய இணைப்பை மேம்படுத்துவது மற்றும் பொருட்கள் மற்றும் தளவாடங்களின் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புறவழிச்சாலை பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பதாவது: “பஞ்சாபில், 28.9 கி.மீ நீளமுள்ள 4-வழி அணுகல்-கட்டுப்பாட்டு வடக்கு பாட்டியாலா புறவழிச்சாலையை நிர்மாணிக்க ரூ .1255.59 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். இந்தப் புதிய புறவழிச்சாலை பாட்டியாலாவைச் சுற்றியுள்ள வட்டச் சாலையை நிறைவு செய்து, நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும். இந்தத் திட்டம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு, பொருட்கள் மற்றும் தளவாடங்களின் சீரான இயக்கத்தை எளிதாக்கும், இது பகுதியின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

English Summary

Central Government approves construction of North Patiala Bypass at a cost of Rs.1255.59 crore

Vignesh

Next Post

அண்ணிக்கு பீட்சா ஊட்டிவிட்ட கணவன்..!! ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மனைவி..!! கடைசியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்..!!

Fri Oct 18 , 2024
After her husband fed her sister-in-law pizza, the enraged wife called her 4 brothers home and committed the heinous act.

You May Like