fbpx

PMO India: கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு ஒப்புதல்…!

2024-25 பருவத்தில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2024-25 பருவத்தில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2024-25 பருவத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.5,335/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு குவிண்டாலுக்கு ரூ. 285 அதிகமாகும். இது அகில இந்திய சராசரி உற்பத்திச் செலவில் 64.8 சதவீத வருவாயை உறுதி செய்யும்.

கடந்த 10 ஆண்டுகளில், கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 2014-15 ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .2,400 லிருந்து 2024-25 ஆம் ஆண்டில் ரூ .5,335 ஆக உயர்த்தி, 122 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நடப்பு 2023-24 பருவத்தில், சுமார் 1.65 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில், 524.32 கோடி ரூபாய் மதிப்பிலான, 6.24 லட்சம் பேல் கச்சா சணல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

Vignesh

Next Post

Actor ajith: 4 மணிநேர அறுவை சிகிச்சை!… மூளையில் இருந்த கட்டி அகற்றம்!... நடிகர் அஜித் பற்றி வெளியான தகவல்!

Fri Mar 8 , 2024
Actor ajith: நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடா முயற்சி” (Vidaa Muyarchi) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தநிலையில், நேற்று நடிகர் அஜித், சென்னை உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

You May Like