fbpx

பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள்… விதிகள் 2011-ல் திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை…!

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை சட்டமுறை எடையளவு விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு முன்மொழிவை வெளியிட்டுள்ளது

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு (பொட்டலப் பொருட்கள்) ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுவர சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள்-2011-ல் திருத்தம் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இவ்விதிகள் சில்லறை விற்பனையில் பொட்டல பைகளில் (பாக்கெட்) விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும்.

இந்த திருத்தப்பட்ட விதி இந்தப் பொருட்களுக்கு ஒரே மாதிரியான தரநிலைகளை வரையறுக்கவும், பல்வேறு தயாரிப்புகளில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் உதவும். முழுமையான தகவல்களின் அடிப்படையில் நுகர்வோர் தகவலறிந்த முறையில் பொருட்களின் தேர்வுகளை மேற்கொள்ள உதவும். இது தொடர்பாக 2024 ஜூலை 29 வரை 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English Summary

CENTRAL GOVERNMENT CONSIDERATION OF AMENDMENT IN PACKAGED GOODS… RULES 2011

Vignesh

Next Post

வேலைவாய்ப்பு குறித்த போலி விளம்பரங்கள்!. மின்வாரியம் எச்சரிக்கை!

Mon Jul 15 , 2024
Employment advertisements on social media! Electricity Board Alert!

You May Like