fbpx

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.1,60,000 வரை சம்பளம்..! மிஸ் பண்ணிடாதீங்க..

மத்திய அரசு நிறுவனமான DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள 642 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிட விபரம்: DFCCIL நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர், எக்ஸிகியூட்டிவ் மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) என மொத்தம் 642 பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வயது வரம்பு: மேற்கண்டபதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு குறையாதவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். MTS பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 33 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் விண்ணப்பிப்பவர்கள் அதற்குத் தேவையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி குறித்த முழுமையான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்க வேண்டும்.

சம்பள விபரம்: DFCCIL நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர் பதவிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.50,000 முதல் 1,60,000 (E2 லெவல், ஐடிஏ பே ஸ்கேல்), நிர்வாகிகளுக்கு ரூ.30,000 முதல் 1,20,000 (E0 நிலை, ஐடிஏ ஊதிய அளவு), MTS பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.16,000 முதல் 45,000 (N-1 நிலை, ஐடிஏ ஊதிய அளவு) வரையில் ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: MTS பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இரண்டு கணினி அடிப்படையிலான தேர்வுகளை (CBT 1 மற்றும் CBT 2), அதைத் தொடர்ந்து ஒரு உடல் திறன் சோதனை (PET), ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஜூனியர் மேனேஜர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இரண்டு கணினி அடிப்படையிலான சோதனைகள் (CBT 1 மற்றும் CBT 2), ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) விண்ணப்பக் கட்டணம் ரூ. 500, எக்ஸிகியூட்டிவ் / ஜூனியர் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப முறை: DFCCIL நிறுவனத்தில் உள்ள இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் dfccil.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கம் மூலம் பிப்ரவரி 16ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பப் படிவத்தில் மாற்றம் செய்வதற்குப் பிப்ரவரி 23 முதல் 27 வரை கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more : நயன்தாரா முதல் ராஷ்மிகா வரை.. காலையில் இந்த உணவுகளை தான் சாப்பிடுறாங்க..!! ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்..

English Summary

Central Government Corporation DFCCIL has released a notification to fill 642 vacant posts.

Next Post

'லிவ் இன்' உறவுகளுக்கு எல்லைகள் வகுப்பது அவசியம்..!! - அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து

Sun Jan 26 , 2025
The Allahabad High Court ordered that the boundaries of a 'live-in' relationship should be demarcated.

You May Like