fbpx

சாமானிய மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.. வருமான வரி விலக்கு குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு..

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.. ஏனெனில் அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. குறிப்பாக வருமான வரிச்சலுகை குறித்த எதிர்பார்ப்பு நடுத்தர மக்களிடம் எழுந்துள்ளது.. கடைசியாக 2012-ம் ஆண்டில் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.. அதன்பிறகு உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை..

தற்போதைய நடைமுறையின் படி ரூ. 2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.. ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10% வரியும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரியும் செலுத்த வேண்டும்.. ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30% வரி செலுத்த வேண்டும்..

இந்த சூழலில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.. அதன்படி தற்போதுள்ள ரூ.2.5 லட்சத்தில் இருந்து விலக்கு வரம்புகளை ரூ.5 லட்சமாக உயர்த்த நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய வருமான வரி விதிகளின்படி, விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சமாகவும், 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சமாகவும் உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விலக்கு வரம்பு ரூ.5 லட்சம் ஆக உள்ளது..

Maha

Next Post

’இனி ஆதார் மட்டும் போதும்’..!! டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ கணக்கு ஆக்டிவேட் செய்யலாம்..!! எப்படி தெரியுமா.?

Tue Jan 31 , 2023
டெபிட் கார்டு இல்லாமல் ஆதார் மூலம் யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்யும் வசதியை பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அனைவருக்கும் சேர்க்கும் வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘உங்களுக்கு தெரியுமா..? யுபிஐ பதிவு செய்வதற்கு டெபிட் கார்டு தேவையில்லை. யுபிஐ அலையில் இணைய ஆதார் கார்டு ஸ்கேன் செய்தால் போதுமானது’ எனத் தெரிவித்துள்ளது. ஆதார் […]

You May Like