மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்து கையகப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்திய தேசிய ஆவணக் காப்பகம் (என்ஏஐ) மத்திய அரசின் நடப்பில் இல்லாத பதிவுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொது பதிவுகள் சட்டம், 1993-இன் விதிகளின்படி, நிர்வாகிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டிற்காக ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒரு முதன்மையான ஆவணக்காப்பக நிறுவனமாக, இந்திய தேசிய ஆவணக்காப்பகம் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வழிநடத்துவதிலும் வடிவமைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பொது ஆவணங்களின் விரிவான சேகரிக்கும் நடவடிக்கைகளை இந்திய தேசிய ஆவணக் காப்பகம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய அனைத்துத் துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்களின் முக்கியப் படைப்புகள் மற்றும் தனியார் பத்திரிகைகளின் சேகரிப்பையும் கொண்டுள்ளது. மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் அசலான கடிதங்கள், கடவுச் சீட்டு, ஆதார் அட்டை, நிரந்தர கணக்கு அட்டை, சுற்றுலா அறிக்கைகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள், அமைப்புகளில் டாக்டர் கலாம் ஆற்றிய சொற்பொழிவுகள் அடங்கிய தனிப்பட்ட ஆவணங்களை இந்திய தேசிய ஆவணக் காப்பகம் கையகப்படுத்தியது..
இந்தத் தொகுப்பில் பல அசல் புகைப்படங்களும் உள்ளன. இந்த சேகரிப்பை டாக்டர் கலாமின் மருமகள் டாக்டர் ஏ.பி.ஜே.எம் நஜீமா மரைக்காயர், அவரது பேரன் ஏ.பி.ஜே.எம்.ஜே ஷேக் சலீம் ஆகியோர் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.
Read More: ஆந்திராவில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கு பாஜக போட்டியிடும் நபர்…! வெளியான அறிவிப்பு