மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 24,369 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலியாக உள்ள பணியிடங்களின் விவரம்…
எல்லை பாதுகாப்பு படை – 10,497
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை – 100
மத்திய ரிசர்வ் போலீஸ் படை – 8,911
எஸ்.எஸ்.பி. – 1,284
தகவல் தொழில்நுட்ப வணிக காப்பகம் – 1,613
ஏ.ஆர். – 1,697
சிறப்பு பாதுகாப்பு படை – 103
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் – 167
மொத்தம் 24,369 பணியிடங்களுக்கு BC, MBC, SC, ST பிரிவினர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் 30.11.2022 வரை விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு – 18 முதல் 23 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி – 10ஆம் வகுப்பு தேர்ச்சி