fbpx

வாவ்.. மெகா பிளான்..!! “மதுரை, அயோத்தி உட்பட ’30’ நகரங்களில் சூப்பர் திட்டம்..” மத்திய அரசு அறிவிப்பு.!

வருகிற 2026ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 30 முக்கிய நகரங்களில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு, வாழ்வாதாரம் அளித்து, மறுவாழ்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு, பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடும் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்களை இடமாற்றம் செய்வதற்காக 30 நகரங்களைத் தேர்வு செய்துள்ளது. நாடு முடிவு முழுவதும் உள்ள ஹாட்ஸ்பாட்டுகளை தேர்வு செய்வதற்கு, மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

2026 ஆண்டுக்குள் இந்த நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதே இவர்களின் நோக்கம். இன்னும் சில நகரங்களை இந்த பட்டியலில் சேர்க்கவும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது தேர்வு செய்யப்பட்ட நகரங்கள் அனைத்தும் சுற்றுலா தளங்கள் ஆகும். அதில் இருக்கும் மதம் தொடர்பான இடங்களுக்கும், வரலாற்றுக்கும் பெயர் பெற்றவையாகவும் உள்ளன.

விளிம்பு நிலையில் வாழும் தனிநபருக்கான வாழ்வாதாரம் மற்றும் நிறுவனங்களை ஏற்படுத்தி ஆதரவு அளிக்கும் (SMILE) துணைக் குழுவின் திட்டத்திற்கு கீழ் இது செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக வருகிற பிப்ரவரியில் தேசிய அளவிலான போர்டலையும், மொபைல் செயலையும் அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கு 25 நகரங்கள் ஒப்புதல் தெரிவித்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. சில நகரங்கள் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மதுரை, கோழிக்கோடு, விஜயவாடா மற்றும் மைசூர் போன்ற நகரங்கள் ஆய்வுகளை முடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வழித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க அடித்தளம் அமைப்பதற்கும், போதுமான நிதியை மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Next Post

சிக்கியது அடுத்த ஆதாரம்!… ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.70 ஆயிரம் கோடி சம்பாதித்த திமுக!… பகீர் கிளப்பிய அண்ணாமலை!

Wed Jan 31 , 2024
திமுக ஆட்சிக்கு வந்த 31 மாதங்களில் ரூ.70 ஆயிரம் கோடி சம்பாதித்து வைத்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் அரசியல் யாத்திரை ஒன்றை துவங்கியுள்ளார். கடந்த 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த யாத்திரையை ராமேஸ்வரத்தில் துவக்கி வைத்தார். அதன் ஒருபகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் பாத […]

You May Like