fbpx

CISF வேலைவாய்ப்பு.. மாதம் 69 ஆயிரம் சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. தேதி முடிய போகுது..!!

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) பல்வேறு தொழில்துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,161 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

காலிப்பணியிடங்கள் : மொத்தமாக 1,161 காலிப்பணியிடங்கள் உள்ளன, இதில் ஆண்களுக்கு 945, பெண்களுக்கு 103, மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 113 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிட விவரங்களைப் பார்க்கும்போது, சமையலாளராக 444, பார்பராக 180, சலவை செய்யுபவராக 236, தூய்மை பணியாளராக 137, தையல்காரராக 21, பெயிண்டராக 2, தச்சராக 8, எலக்ட்ரீஷியனாக 4, மாலியாக 4, வெல்டராக 1, சார்ஜ் மெக்கானிக்காக 1, மற்றும் எம்பி உதவியாளராக 2 இடங்கள் உள்ளன.

வயது வரம்பு : வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்சம் 23 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (01.08.2025 தேதியின்படி). மேலும், SC/ST க்கு 5 ஆண்டுகள், OBC க்கு 3 ஆண்டுகள், மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைகள் படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி : கல்வித் தகுதியைப் பொருத்தவரை, விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட தொழில்பிரிவில் ITI (Industrial Training Institute) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் (03.04.2025 தேதியின்படி).

தேர்வு முறை : தேர்வு முறை கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய கட்டங்களில் நடைபெறும்.

சம்பள விவரம் : குறைந்தபட்சம் ரூ.21,700 முதல் அதிகபட்சம் ரூ.69,100 வரை வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? ஆர்வமுள்ளவர்கள் CISF அதிகாரப்பூர்வ இணையதளம் https://cisfrectt.cisf.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் 05.03.2025 அன்று தொடங்கும் மற்றும் 03.04.2025 அன்று முடிவடையும்.

Read more : ‘வீட்டை என் பெயருக்கு மாற்று..’ சொத்து தகறாரில் தாயை கொடூரமாக தாக்கிய மகள்.! கதறிய மூதாட்டி..!!அதிர்ச்சி வீடியோ

English Summary

Central Industrial Security Force (CISF) has published employment notification in various industries. A total of 1,161 vacancies are to be filled

Next Post

இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் பெற முடியும்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

Sun Mar 2 , 2025
You can get a passport only if you have this certificate.. Central Govt Action Notification..!!

You May Like