டெல்லி-என்.சி.ஆர், நொய்டா, குர்கான், ஃபரிதாபாத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் சிறிது நேரம் உணரப்பட்டதாக தகவல். இதனால் கட்டிடங்களை விட்டு மக்கள் வெளியே வந்து இருந்தனர்.
நேபாளத்தின் இன்றைய தினம் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று பிற்பகல் 2.25 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து பிற்பகல் 2.51மணிக்கு 6.2ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என்று தகவல்.
வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டதால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, டெல்லியில் உள்ள நிர்மான் பவன் கட்டடத்தில் இருந்து மற்றவர்களுடன் வெளியேறி சாலையில் நின்று கொண்டிருந்தார்.