அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தை சத்ரபதி சம்பாஜிநகர் என்றும், உஸ்மானாபாதை தாராஷிவ் என்றும் பெயர் மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் நகரங்களின் பெயர்கள் முறையே சத்ரபதி சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என மறுபெயரிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு நகரங்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்ரேவால் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, 2022 இல் தனது அரசாங்கம் ஆட்சியை இழப்பதற்கு முன்பு, முதல்வராக இருந்த தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பெயர்களை மாற்ற முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .