fbpx

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிப் பயணம்..  வழிநெடுக காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி..!!

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமருமான மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை நாட்டை வழிநடத்தி, முக்கியப் பணிகளைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார். அவரது பதவிக்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இவருக்கு 92 வயது ஆகிறது. இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதைத்தொடா்ந்து அவரின் உடல் தேசிய கொடியால் போா்த்தப்பட்டு மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

மன்மோகன் சிங்கின் உடலுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு அவரின் உடல் சனிக்கிழமை காலை 8 மணிக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டது. காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு காங்கரஸ் தலைவர்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடா்ந்து காலை 10 மணியளவில் மயானத்தை நோக்கி அவரின் இறுதி ஊா்வலம் தொடங்கியது.

இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். ஊா்வலத்தை தொடா்ந்து நிகம்போத் காட் மயானத்தில் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது. இறுதிச் சடங்கு நடைபெறும் சனிக்கிழமையன்று அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானதைத் தொடர்ந்து அவருக்கு நினைவிடம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read more ; Gold Rate | தங்கம் விலை குறைந்தது..!! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! ஒரு கிராம் எவ்வளவு..?

English Summary

Centre decides to make memorial for Manmohan Singh, will find appropriate venue soon: Govt sources

Next Post

”FIR வெளியானதற்கு நாங்கள் பொறுப்பல்ல”..!! மாணவி வழக்கில் அறிக்கை தாக்கல் செய்தது காவல்துறை..!!

Sat Dec 28 , 2024
The investigation report regarding the student sexual assault case was filed in the High Court.

You May Like