கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 11.9 லட்சம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியிருப்பதாக ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் பரவ தொடங்கிய இந்த தொற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமுடக்கம், மருத்துவமனையில் நிரம்பி வழியும் கொரோனா நோயாளிகள் என எங்கு பார்த்தாலும் சுகாதார நெருக்கடி சூழலே ஏற்பட்டது. இந்தியாவிலும் கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா ஏற்படுத்திய தாக்கம் மறையத் தொடங்கியுள்ள சூழலில், தற்போது கொரோனா உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் அரசு அறிவித்த எண்ணிக்கையை விட உண்மையான உயிரிழப்புகள் 8 மடங்கு அதிகம் இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 11.9 லட்சம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
2020-ம் ஆண்டு இந்தியாவில் கூடுதலாக 11.9 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் ஆதிவாசிகள், தலித்துகள், முஸ்லிம்கள் உள்ளிட்ட மக்களே கொரோனா நேரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் ஏற்க கூடியது இல்லை எனவும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஆய்வறிக்கையை மறுத்துள்ளது.
இதில் இஸ்லாமியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஆயுட் காலம் 5.4 ஆண்டுகள் வரை குறைந்து இருப்பதாகவும், பழங்குடியினர்(4.1), எஸ்.சி (2.7) என குறைந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உயர் சாதி இந்துக்கள், ஒபிசி பிரிவினர் ஆகியோரின் லைஃப் எக்ஸ்பெடன்சி எனப்படும் ஆயுட்காலம் 1.3 ஆண்டுகள் சரிந்து உள்ளதாக ஆய்வில் கூறியிருக்கிறார்கள்.
Read more ; இரு நாடுகள் ஆட்சி செய்யும் உலகின் தனித்துவமான தீவு..!! எங்கே இருக்கு தெரியுமா?