fbpx

சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறைவு…! TRB முக்கிய அறிவிப்பு…!

வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவடைந்தது.

இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் 33 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை 05.06.2023 அன்று வெளியிடப்பட்டது . விண்ணப்பதாரர்கள் 12.07.2023 வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் 42,716 பேர் . அதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு ” ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR ( Optical Mark Reader ) வழியில் 10.09.2023 அன்று தேர்வு நடத்தப்பட்டதில் 35,403 பேர் தேர்வு எழுதினார்கள் . விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் , வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 13.07.2023 முதல் 17.07.2023 வரை திருத்தம் செய்ய ( Edit Option ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலருக்கான ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR ( Optical Mark Reader ) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 09.11.2023 அன்று வெளியிடப்பட்டன பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு , அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்கு 1 : 1.25 என்ற விகிதாச்சாரப்படி 14.12.2023 ( 50 பணிநாடுநர்கள் ) மற்றும் 04.01.2024 அன்று ( ஒரு பணிநாடுநர் ) சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மொத்தம் 51 பணிநாடுனர்கள் அழைக்கப்பட்டனர்.

வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவடைந்து 33 இனச் சுழற்சிகளுக்கான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவுப் பட்டியல் ( Provisional Selection List ) விவரத்தினை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து திடீர் ராஜினாமா...! பின்னணி என்ன..?

Tue Jan 16 , 2024
ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்தார்.. ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியில் கடந்த 4-ம் தேதி இணைந்தார். அக்கட்சியின் அகில இந்திய தலைவர் […]

You May Like