fbpx

Rain: இந்த 6 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்…!

இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை மறுநாள் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 9-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஸ்தம்பித்த பெங்களூரூ!… 133 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை!... ஒரேநாளில் 111 மி.மீ மழை பதிவு!

Tue Jun 4 , 2024
Bengaluru: கடந்த 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரில் 111 மிமீ மழை பெய்துள்ளது, இது 133 ஆண்டுகால சாதனையை முறியடித்தது, ஜூன் மாதத்தில் ஒரே நாளில் அதிக மழை பெய்தது என்று வானிலை துறை தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) விஞ்ஞானி புவியரசன் கூறுகையில், 133 ஆண்டுகளில் ஜூன் மாதம் 2-ம் தேதி அதிக மழை பெய்துள்ளது. ஜூன் 1 மற்றும் 2 ஆம் […]

You May Like