fbpx

இந்த மாவட்டத்தில் எல்லாம் வரும் 7, 8ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் வரும் 7, 8ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 8-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 9-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10.05.2024 மற்றும் 11.05.2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இடுப்பு வலி சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த டாக்டர்.. வெளுத்து வாங்கிய உறவினர்கள்!

Sun May 5 , 2024
விழுப்புரத்தில், சிகிச்சைக்கு வந்த கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிசியோதெரபி டாக்டர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய கல்லுாரி மாணவி, விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் எம்.ஏ., படித்து வருகிறார். இவர், சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மற்றும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவமனைக்கு, இடுப்பு வலி பாதிப்பிற்காக சிகிச்சைக்கு சென்றார். மாணவி கடந்த 3 […]

You May Like