fbpx

தமிழக மக்களே குடையை மறந்து விடாதீர்கள்….! இன்று காலை 10 மணி வரையில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலே கோடை காலம் என்பது கோடைகாலமாகவே காட்சி தரவில்லை. மாறாக பருவ மழை காலமாகவே காட்சி தந்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து பொதுமக்கள் சிரமப்பட்டாலும் அவ்வப்போது மழை வந்து அந்த சிரமத்தை தணித்து விடுகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை அடுத்த 1 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற 3 மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தெற்கு வங்க கடல் பகுதியில் மேல் வளிமண்டல சுழற்சி காணப்பட்டு வருகிறது. அதோடு, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன் கோயமுத்தூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, திருப்பூர், விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

மக்களே...! வணிக ரீதியிலான சிலிண்டர் விலை ரூ.7 உயர்வு...!

Tue Jul 4 , 2023
வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தியுள்ளன. டெல்லி சில்லறை விற்பனையில் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,773ல் இருந்து ரூ.1,780 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் வணிக ரீதியிலான சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டது. ரூ.8 அதிகரிப்பு என்பது நாள் ஒன்றுக்கு ரூ.80 கூடுதல் […]

You May Like