fbpx

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, இன்று, தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. நாளை தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்..

வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.. ஈரோட்டில் அதிகபட்சமாக 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று..!! பரிசோதனையை தீவிரப்படுத்திய நிர்வாகம்..!!

Mon Apr 10 , 2023
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரதத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது அண்ணன் சோமு. இவர்களது பூர்வீக ஊர் விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமம். அண்ணன்-தம்பி இருவரும் விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வந்துள்ளனர். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பூர்வீக வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும், இருவரும் மது போதையில் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால், அண்ணன் தம்பியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

You May Like