fbpx

சண்டிகர் பல்கலைக்கழக வீடியோ விவகாரத்தில் கைது …கைது செய்யப்பட்ட நான்கவாது ஆள் ராணுவ வீரர்…

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஆபாசவீடியோக்கள் வெளியான விவகாரத்தில் அருணாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த ராணுவீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் குளிக்கும் வீடியோ உள்ளிட்ட ஆபாச வீடியோ வெளியிடப்பட்டதாக கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருடைய ஆண் நண்பருக்கும் தொடர்பு இருந்ததை அடுத்து ஷிம்ளாவைச் சேர்ந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 4வது நபரை கைது செய்துள்ளனர்.

இவர் அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த சஞ்சீவ் சிங்க என்பவராவார். ராணுவ வீரராக பணியாற்றி வருகின்றார். மாணவியை மிரட்டி வீடியோக்களை வாங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து உயர்மட்டக் குழு விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

இந்த விசாரணையின்போது அந்த பெண் தன்னை அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணில் இருந்து மிரட்டியதாக கூறியிருந்தார். அந்த எண்ணைக் கொண்டு விசாரித்ததில் அருணாச்சலத்தை சேர்ந்த சஞ்சீவ் என்பது தெரியவந்தது. மேலும் ஒரு அதிர்ச்சியாக அவர் ராணுவ வீரர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. விரைவில் முழு விசாரணை முடிவுகள் வெளியிடப்படும் என்று விசாரணைக்குழுவினர் ரெிவித்துள்ளனர்.

Next Post

வைரல் வீடியோ : ஸ்கார்பியோ கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரல் …

Sat Sep 24 , 2022
அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஸ்கார்பியோ கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வைரலாகியுள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் சுபன்சிரி மாவட்டத்தில் சிபுட்டா கிராமத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படியாவது கடந்து சென்றுவிடலாம் என நினைத்த ஓட்டுனர் ஸ்கார்பியோ காரை ஓட்டிச்சென்றார். பாதி தூரம் சென்றதும் அந்த கார் நடுவில் சிக்கிக் கொண்டது. […]

You May Like