fbpx

சந்திரமுகியாக மாறிவிட்டார் சந்திரபாபு நாயுடு!… ரத்தத்தை குடித்துவிடும்!… ஜெகன்மோகன் ரெட்டி விளாசல்!

Andhra: கொஞ்சம் ஏமாந்தால் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் இரத்தம் குடிக்க வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக தாக்கி பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருப்பதி மாவட்டம் குருராஜுபள்ளியில் இருந்து தொடங்கி காளஹஸ்தி வழியாக நாயுடுப்பேட்டையில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் 8வது நாள் பேருந்து யாத்திரையில் ஈடுபட்டிருந்தார்.. அப்போது நடந்த பிரசார மாநாட்டில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: முதியோர்களுக்கு மாற்று திறனாளிகள், விதவைகளுக்கு வீட்டிற்கே சென்று ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி விடிந்தவுடன் தன்னார்வலர்கள் நேரடியாக வீடு வீடாக வந்து பென்சன் வழங்கி வந்தனர். தேர்தல் வருவதால் பொறாமை கொண்ட சந்திரபாபு தனது உறவினரான நிம்மகட்டா ரமேஷ் மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து தன்னார்வலர்கள் மூலம் வீட்டிற்கே பென்சன் வழங்குவதை தடுத்து நிறுத்தினார்.

இதனால் வெயிலில் நடக்க முடியாமல் பென்சன் பெற சென்று 31 முதியோர்கள் உயிரிழந்து விட்டனர். இரண்டு நாட்களில் இவ்வளவு பேர் இறந்தது வருத்தமளிக்கிறது. 31 பேரின் மரணத்திற்கு காரணமான சந்திரபாபு தான் கொலையாளி. இரண்டு மாதங்கள் பொறுமையாக இருங்கள் மீண்டும், ஜூன் 4ம் தேதி மீண்டும் ஆட்சிக்கு வருவேன். தன்னார்வ அமைப்பு மூலம் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்து பென்சன் வழங்கப்படும். கொஞ்சம் ஏமாந்தால் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் இரத்தம் குடிக்க வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று அவர் பேசினார்.

Readmore: மாஸ் உத்தரவு..!! உங்கள் பத்திரங்கள் நிலுவையில் உள்ளதா..? சார் பதிவாளர்கள் மீது பாயும் நடவடிக்கை..!!

Kokila

Next Post

அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பணம் கொட்டப்போகுது..!! ஏப்ரல் மாத சம்பளத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

Fri Apr 5 , 2024
18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்றும் இதனால், கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது. இது […]

You May Like