நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கவில்லை என்றும் தென் துருவத்திலிருந்து 619 கிலோமீட்டர் தொலைவில் தரை இறங்கியதாகவும் சீனாவின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 3 விண்கலம். இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. அதிலிருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று 14 நாட்கள் தனது ஆய்வு பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் சூரியஒளி இல்லாததால் நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டர் கருவிகள் உறக்க நிலையில் கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து நிலவில் சூரிய உதயம் வந்த பிறகும் லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலையிலேயே உள்ளது. மேலும் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவரை விழிக்க வைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. இந்த சந்திராயன் 3 திட்டத்தின் மூலம்,நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது.
இந்நிலையில் சந்திராயன் 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியாதாக கூறப்படுவது தவறு என்றும், நிலவின் தென் துருவத்திலிருந்து 619 கிமீ தொலைவில் தான் சந்திராயன் 3 தரையிறங்கியது என்றும், சந்திராயன் 3 விண்கலம் தரையிறங்கிய பகுதியை தென் துருவ பகுதியாக ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் சீனாவின் மூத்த விஞ்ஞானி ஓயாங் ஜியுவான் கூறியுள்ளார்.
சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஓயாங் ஜியுவான், சீன மொழியான சயின்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சந்திரயான்-3 தரையிறங்கும் தளம், 69 டிகிரி தெற்கு அட்சரேகையில், தென் துருவத்திற்கு அருகில் இல்லை, இது 88.5 முதல் 90 டிகிரி வரை வரையறுக்கப்பட்டுள்ளது. பூமியில், 69 டிகிரி தெற்கே அண்டார்டிக் வட்டத்திற்குள் இருக்கும். ஆனால் வட்டத்தின் சந்திர பதிப்பு துருவத்திற்கு மிக அருகில் உள்ளது. மேலும் சந்திரயான்-3 தென் துருவப் பகுதியில் இருந்து 619 கிலோமீட்டர் (385 மைல்) தொலைவில் இருந்தது என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிவு இந்திய மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.