இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திராயன் -3, இன்று சரியாக மாலை 6.04 மணிக்கு விண்ணில் தரையிறங்கி சரித்திர சாதனையை படைத்துள்ளது. சந்திராயன்-3 திட்டம் வெற்றிபெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008ல் சந்திரயான் விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் செலுத்தியது. இது நிலவை சுற்றி வந்து வெற்றிகரமாக செயல்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 2 விண்கலம், 2019ல் அனுப்பப்பட்டது. இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டாலும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க வேண்டிய, லேண்டர் சாதனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நிலவில் மோதியது.
இந்த அனுபவத்தின் அடிப்படையில், நிலவில் மெதுவாக தரையிறங்கும் வகையில், ஒவ்வொரு நொடிக்கும் திட்டமிட்டு, 650 கோடி ரூபாய் செலவில், சந்திரயான் – 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இந்நிலையில் இன்று மாலை 6.04 மணிக்கு விண்ணில் தரையிறங்கி சரித்திர சாதனையை படைத்துள்ளது.
சந்திராயன்-3 வெற்றியால் இந்தியா வரலாறு படைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம். இந்த வெற்றியின் மூலம் பி[ஊதிய இந்தியா உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் விஞ்ஞானிகளுக்கு கோடான கோடி நன்றியையும் தெரிவித்தார் நரேந்திர மோடி.