ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் 10, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள், ஏப்ரல் 24, 25ம் தேதிகளில் நடத்தப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; அரசு, அரசு உதவிபெறும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் 10 மற்றும் 12- ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு 24-ம் தேதிக்கும், ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஏப்ரல் 25-ம் தேதியிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 4 முதல் 9-ம் வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கான தேதியும் மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பாலிடெக்னிக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.