fbpx

அதிர்ச்சி…! இட ஒதுக்கீடு விதிமுறைகள் மாற்றம்… UGC வெளியிட்ட வெளியிட்ட வழிகாட்டுதல்…!

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்கி, இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானியக் குழு.

அதே போல 12பி அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளில் யுஜிசி தற்போது மாற்றம் செய்துள்ளது. புதிய திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதன் படி, தேசிய கல்விக் கொள்கை- 2020 அமலானது முதல் உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தியபடி யுஜிசியின் 12பி அங்கீகார அனுமதிக்கான விதிகள் சீரமைக்கப்பட உள்ளது.

இதற்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் கொண்ட வரைவு அறிக்கை யுஜிசி வலைதளத்தில் (/www.ugc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதுதொடர்பான கருத்துகளை suggestions.collegesregulation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பிப்ரவரி 4-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

"ப்ளீஸ்.. எங்களை கொலை செய்து விடுங்கள்.."! கருணை கொலைக்கு உச்ச நீதிமன்றத்தை அணுகிய கேரள குடும்பம்.! நெஞ்சை உருக்கும் நிகழ்வு.!

Sun Jan 28 , 2024
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்களையும் தங்களது குழந்தைகளையும் கருணை கொலை செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்துள்ள கொழுவனல் பகுதியில் வசித்து வருபவர்கள் மணு ஜோசப் மற்றும் சுமிதா ஆன்டனி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் பள்ளியில் படித்து வரும் நிலையில் மற்ற 2 […]

You May Like